என்னை விட்டுங்க.. முடியல.. காருக்குள் துடித்தேன்.. ஆனால், என் அம்மாவே அதை சொன்னாங்க..

என்னை விட்டுங்க.. முடியல.. காருக்குள் துடித்தேன்.. ஆனால், என் அம்மாவே அதை சொன்னாங்க..

நடிகை சினேகா கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான விரும்புகிறேன் என்ற திரைப்படம் தான் அவருடைய முதல் தமிழ் திரைப்படம். 

ஆனால், அதற்கு முன்பே பார்த்தாலே பரவசம், ஆனந்தம், என்னவளே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி விட்டன என்றாலும் அவருடைய முதல் திரைப்படம் விரும்புகிறேன் திரைப்படம் தான். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது நடிகை சினேகாவின் வயது 19 தான். இவருடைய உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதாகும். 

விரும்புகிறேன் படத்தில் நடித்த போது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் காரணமாக காருக்குள் கதறி அழுத்திருக்கிறார் நடிகை சினேகா. 

இதனை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, விரும்புகிறேன் படத்தில் நடித்த போது மண்ணில் உருண்டு புரண்டு நடிப்பது போல சில காட்சிகள் படமாக்கப்பட்டன. 

அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனக்கு படத்தில் நடிப்பதெல்லாம் செட்டாகாது. என்னை விட்டுடுங்க.. என்னால் முடியல.. என அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு காருக்குள் கதறி துடித்தேன். 

ஆனால், என்னுடைய அம்மா சரி.. நீ இனிமேல் நடிக்க வேண்டாம்.. படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டாய்.. இந்த படத்தில் மட்டும் நடித்து முடித்துவிடு.. பார் எத்தனை பேர் இந்த படத்திற்க்காக கஷ்டப்படுறாங்க.. அவன்களுக்காக இந்த படத்தில் நடித்து முடித்து விடு.. 

அடுத்து இனிமேல் நீ படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறினார். அவர் சொன்ன அந்த வார்த்தைக்காக மட்டுமே அந்த படம் முழுக்க நான் நடித்து முடித்தேன். 

ஆனால், அந்த படம் வெளியான பிறகு எனக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தேன் என பேசி இருக்கிறார் நடிகை சினேகா.

LATEST News

Trending News

HOT GALLERIES