என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. ஹனிமூன் நேரத்தில் கீர்த்தி சுரேஷ் நிலை.. தீயாய் பரவும் வீடியோ..!
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ஆண்டனி தட்டில் என்பாவரியா திருமணம் செய்து கொண்டார். கோவாவில் இவர்களுடைய திருமணம் இந்து திருமண முறைப்படி தடபுடலாக நடந்தது.
இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்தவ முறைப்படி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
இப்படி தன்னுடைய திருமண நிகழ்வில் பிஸியாக இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அப்படியே, கேமராவை கட் செய்து விட்டு பார்த்தால் அடுத்த சீனில் அவர் நடித்த முதல் பாலிவுட்படமான பேபி ஜான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் அம்மணி.
புதுசா கல்யாணமான பொண்ணு கணவருடன் தேன்நிலவு சென்று கொண்டாடுவார் என்று பார்த்தால்.. இப்படி படத்தின் பட ப்ரோமோஷனல் கலந்து கொண்டிருக்கிறார் என்று பலரும் ஷாக் ஆகித்தான் போனார்கள்.
கொஞ்சமும் ஓய்வில்லாமல் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தன்னுடைய தேன் நிலவை காட்டிலும் படத்தின் பிரமோஷன் முக்கியமாக இருக்கிறதா..? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. எங்க செல்லத்த..? என்று அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
இந்நிலையில், ஓய்வே இல்லாத காரணத்தினால் மேக்கப் போடும்போது கண்ணயர்ந்து தூங்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், ஹனிமூன் போற நேரத்துல.. இப்படி புடிச்சு கொண்டு வந்து பட ப்ரோமோஷன் பண்ணிட்டு இருக்கீங்களேடா.. செல்லத்துக்கு தூங்குறதுக்கு கூட நேரமில்லை போல இருக்கு.. என்று உருகி வருகின்றனர்.