“பள்ளியில் படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. அப்போது என் அம்மா..” ராஷ்மிகா மந்தனா உடைத்த சீக்ரெட்..!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பள்ளி கால நினைவுகளை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் பேசியிருந்த ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு நிறைய அவமானங்கள் நடந்தது. நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் நடந்திருக்கிறது.
ஆனால், நான் செய்த ஒரு விஷயத்தை இதுவரை யாருமே பார்த்தது கிடையாது. என் அம்மா மட்டுமே அதனை பார்த்திருக்கிறார். அதுதான் நான் அழுவது.
பள்ளியில் படிக்கும்போது நிறைய முறை அழுத்திருக்கிறேன். பகல், இரவு பாராமல் அழுதிருக்கிறேன். பெரும்பாலும் என் அறைக்குள் தான் நான் அழுவேன். அப்போது என்னுடைய அம்மா பார்த்து விட்டால் ஒரே ஒரு விஷயத்தை தான் திரும்பத் திரும்பச் சொல்வார்.
அழக்கூடாது.. உனக்கு வந்துள்ள பிரச்சனை தான் உலகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையா… என்று கூறுவார். நான் எப்போது அழுதாலும் என்னுடைய அம்மாவுடைய பதில் இதுவாகத்தான் இருந்தது.
இதை கேட்டு கேட்டு.. ஒரு கட்டத்தில் அழுவது என்பது தவறான விஷயம் என்ற சிந்தனைக்குள் நான் சென்று விட்டேன். தற்போது வரை அதுதான் என்னுடைய நம்பிக்கையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
என்ன பிரச்சினை வந்தாலும் பொதுவெளியில் அழக்கூடாது. பிறர் முன் நாம் அழுதால்.. நான் வழுவிழந்து விட்டோம் என்பதை அதை நிரூபித்து விடும்.
எனவே பொதுவெளியில் யார் முன்பும் அழக்கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன். ஆனால், எனக்கும் அனைத்து கஷ்டங்களும் வேதனைகளும் இருக்கிறது. அது நான் என்னுடைய அறைக்குள் சென்ற பிறகுதான் வெளிப்படும் என பேசி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.