கல்யாணம் ஆன உடனே முதலிரவு நடந்தால் தான் அது டைட் ஆகும்.. கயல் ஆனந்தி ஓப்பன் டாக்..!
நடிகை கயல் ஆனந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் ஆனதும் முதலிரவு கர்ப்பம் குழந்தை இப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வது குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
சமீப காலமாக, திருமணம் செய்து கொள்ளக் கூடிய இடம் தம்பதிகள்.. வீடு வாங்கிவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. இன்னும் கொஞ்சம் வசதியை வாய்ப்புகள் வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. இப்போதைக்கு என்ன அவசரம்..? என தங்களுக்குள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை முன்னெடுக்கிறார்கள்
ஒரு கட்டத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அப்போது அவர்களுக்கு பலன் கிடைக்காமல் போய்விடக் கூடிய சம்பவங்களை எல்லாம் நிஜ வாழ்க்கையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில், நடிகை கயல் ஆனந்தி இது குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது என்னிடம் பலரும் கூறியிருக்கிறார்கள். திருமணம் முடிந்ததும் முதலிரவு.. கர்ப்பம்.. குழந்தை என பெற்றுக் கொண்டால் அந்த குழந்தை நம்முடைய குடும்ப உறவில் மிகப்பெரிய ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்.
கணவன் வீட்டாரிடமும்.. மனைவி வீட்டாரிடமும் இருக்கக்கூடிய உறவு டைட் ஆவதற்கு அது உதவி செய்யும் என்று.
திருமணம் ஆவதற்கு முன்பு திருமணம் முடிந்த உடனே முதலிரவு குழந்தை பெற்றுக் கொள்வது இதெல்லாம் தேவைதானா..? என்று நான் யோசித்து இருக்கிறேன். அப்படி செய்திருந்தால் என்னுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்குமா..? என்று கேட்டால் அது கேள்விக்குறியாக தான் இருக்கும்.
ஆனால், நான் திருமணம் ஆன உடனே கர்ப்பமாகி விட்டேன். ஒரே வருடத்திற்குள் எங்களுக்கு குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தை பிறந்த பிறகு எங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி.. என்னுடைய உறவுகள் மத்தியில் இருக்கக்கூடிய அந்த உறவு பிணைப்பு.. இதெல்லாம் அதிகமாக இருக்கிறது.. என்பதை பார்க்கும்போது தான் இதனுடைய உண்மை எனக்கு புரிந்தது என பேசி இருக்கிறார்.