“ஆண் நண்பருடன் அந்த மேட்டர்..” இதை பண்ணக்கூடாது.. ஒத்துக்குறேன்.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா..!

“ஆண் நண்பருடன் அந்த மேட்டர்..” இதை பண்ணக்கூடாது.. ஒத்துக்குறேன்.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா..!

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா ஆண் நண்பருடன் அந்த மேட்டரில் அவசரப்படக்கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என பேசி இருக்கிறார். 

எந்த மேட்டரில் அவசரப்படக்கூடாது..? எதனால் நடிகை நயன்தாரா இப்படி பேசினார்..? என்பது பற்றிய சுவாரசியமான பதிவுதான் இது. 

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பு இன்னும் சில நடிகர்களை காதலித்து அவர்களை பிரேக் அப் செய்தவர் நயன்தாரா என்பது உலகறிந்த உண்மை. 

நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்த நடிகை நயன்தாரா ஒரு கட்டத்தில் அவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பிறகு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் நடிகர் பிரபுதேவாவை காதலித்தார். அவரையே திருமணமும் செய்து கொள்ள இருந்தார் நடிகை நயன்தாரா. 

அந்த நேரத்தில் நடிகை பிரபுதேவாவின் மனைவி நடிகை நயன்தாரா குறித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த விதமாக ஊடகங்களில் பேசியது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. 

உச்சகட்டமாக நடிகை நயன்தாராவை நான் பார்த்தால் எட்டி உதைப்பேன் என்றெல்லாம் பேசியிருந்தார் பிரபுதேவாவின் மனைவி. இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள துடிக்கும் நயன்தாராவிற்கு இது தேவைதான் என்று ரசிகர்கள் பலரும் நயன்தாராவிற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தனர். 

நடிகர் பிரபுதேவாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டு போட்டுக் கொள்ளும் அளவுக்கு பிரபுதேவா மீது பைத்தியமாக இருந்தார் நடிகை நயன்தாரா. ஆனால், பிரபுதேவாவையும் ஒரு கட்டத்தில் பிரிந்தார். 

திருமணதிற்கு பிறகு படங்களில் நடிக்க கூடாது என பிரபுதேவா போட்ட ஆர்டர் நடிகை நயன்தாராவை இந்த முடிவுக்கு தள்ளியது என்று அவரே கூறினார். 

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா ஒரு பெண்ணாக நாம் ஆண் நண்பருடன், காதலருடன் சில விஷயங்களில் தாழ்ந்து போக வேண்டும்.. சில விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும்.. சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.. அது நமக்கு பிடித்த விஷயமாக இருந்தாலும் தன்னுடைய காதலுக்காக அதனை நாம் தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. 

இதுதான் நீண்ட காலத்திற்கு என்னுடைய புரிதலாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அப்படி இருக்கத் தேவையில்லை. அது உண்மையும் இல்லை.. என எனக்கு புரிய வந்தது 

என்ன காரணம் என்றால் நாம் நம்முடைய காதலுக்காக, ஆண் நண்பருக்காக, கணவருக்காக என எதையும் சமரசம் செய்து கொள்ளத் தேவையில்லை. 

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டியது மட்டும் தான். நமக்கான சரியான நபரை தேர்ந்தெடுக்கும் வரை நாம் அவசரப்படக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன் என பேசி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

LATEST News

Trending News

HOT GALLERIES