தடபுடலாக நடைபெற்ற நாக சைதன்யா சோபிதா திருமணம்: இணையத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்
தற்போது நாக சைதன்யா சோபிதா திருமணம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா சோபிதாவிற்கு இனிதே திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமண புகைப்படங்களுக்கான வருகைக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படங்களை நாநாகர்ஜூனா மணமக்களை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திருமணத்தில் நாக சைதன்யா பாரம்பரிய உடை அணிந்து, தனது தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவை கௌரவித்தார்.
இவர் அணிந்துள்ள வேஷ்டி சட்டையானது தெலுங்கு கலாச்சாரம் மற்றும் அவரின் தாத்தாவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக அணிந்துள்ளார். இதில் சோபிதா துலிபாலா தன் குடும்பத்தின் பாரம்பரியத்தில் உடை அணிந்திருந்தார்.
அவர் தனது தாய் மற்றும் பாட்டியிடமிருந்து வந்த பரம்பரை தங்க நகைகளை அணிந்திருந்தார். இது பார்ப்பதற்கு எளிமையாகவும் ஈர்க்ககூடியதாகவும் இருந்தது.
இவர்களின் திருமணம் நாக சைதன்யாவின் தாத்தாவின் சிலை முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.