“படப்பிடிப்பு தளத்திலேயே அதை பண்ண சொல்லுவாங்க..” தெய்வமகள் வினோதினி ஓப்பன் டாக்..!
சின்னத்திரை சீரியலை ரசிக்கின்ற ரசிகர்கள் அதிகளவு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்று ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியும் போட்டி போட்டு சீரியல்களை காலை முதல் இரவு வரை ஒளிபரப்பு செய்து வருகிறது.
அந்த வகையில் தெய்வமகள் என்ற சீரியலில் வினோதினி கேரக்டரில் தனது நடிப்பை பக்குவமாக வெளிப்படுத்தி தன் உண்மையான பெயரையே மறந்து விட்ட புகழ் பெற்ற நடிகை சுகாசினி பற்றி தான் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
சுகாசினி என்ற பெயரைக் கொண்ட இவர் தெய்வமகள் சீரியலில் வினோதினி கேரக்டரை செய்ததை அடுத்து அனைவரும் இவரை வினோதினி என்று தான் அழைக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் இருந்து இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.
அதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தெய்வமகள் சீரியல் தான் மிகப்பெரிய அளவு பிரபலத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு விகடன் தயாரித்து எஸ் குமரன் இயக்கிய தென்றல் என்ற சீரியலின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானதை அடுத்து பல சீரியல் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
அந்த வகையில் இவர் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த தம்பிக்கு எந்த ஊரு நிமிர்ந்து நில் போன்றவற்றில் தனது சிறிய நடிப்பை வெளிப்படுத்திய அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.
மேலும் இணையதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.
அந்த வகையில் நடிகை என்பது தாண்டி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நான் பாடல்களும் பாடி வருகிறேன். படப்பிடிப்பு தளங்களில் என்னைப் பற்றி தெரிந்தவர்கள் படப்பிடிப்பு தளத்திலேயே என்னை பாடல் பாட சொல்லி கேட்பார்கள்.
இப்படி நிறைய மகிழ்ச்சியான நாட்கள் இருக்கின்றன குறிப்பாக தெய்வமகள் படப்பிடிப்பு தளத்தில் நானும் நடிகை ரேகா கிருஷ்ணாவும் சேர்ந்து கொண்டு செய்யும் சேட்டைகள் ஏராளம்.
எப்போதும் என்னை ஏதாவது ஒரு பாடல் பாட சொல்லி ரசிப்பார். நாங்கள் இருவரும் அக்கா, தங்கை போலத்தான் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்தோம் என பேசி இருக்கிறார்.