வெயிட்டு தான்.. கீர்த்தி சுரேஷ் காதலர்.. சென்னையில் மட்டும் எத்தனை கம்பெனி தெரியுமா..

வெயிட்டு தான்.. கீர்த்தி சுரேஷ் காதலர்.. சென்னையில் மட்டும் எத்தனை கம்பெனி தெரியுமா..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மலையாள திரைப்பட நடிகை மேனகா என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஆறுமுகம் ஆன இவர் வளர்ந்த பின் ஹீரோயினியாக தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். 

அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான மகாநடி படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி ஆக நடித்து தேசிய விருதை வென்ற இவர் தற்போது ஹிந்தி ரீமேக் ஆன பேபி ஜான் படத்தில் நடித்திருக்கிறார். 

தமிழைப் பொறுத்த வரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான இவர் எஸ் கே நடிப்பில் வெளி வந்த ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீட்சை பெற்றார். 

இதை எடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் அண்மைக்காலமாக தமிழில் சறுக்கல்களை சந்தித்து இருக்கிறார். 

இதை அடுத்து அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த மாமன்னன் திரைப்படம் ஓரளவு வெற்றியை கொடுத்திருந்தாலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளி வந்த ரகு தாத்தா திரைப்படம் ஃபிளாப் ஆனது. 

இதனை அடுத்து ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்த வரக்கூடிய இவர் தமிழில் பெரிய அளவு கிளாமர் காட்டாமல் மற்ற மொழி படங்களில் அதிக அளவு கிளாமர் காட்டுவதை குறித்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார்கள். 

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதுவும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இவரது திருமணம் கோவாவில் நடக்கலாம் என்ற பேச்சுக்கள் இணையும் முழுவதும் வியாபித்துள்ளது. 

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை அறிமுகப்படுத்தி வைத்திருப்பதோடு 15 வருடமாக காதலித்து வருவதாக சொல்லி இருக்கக்கூடிய இவர் படிக்கும்போதே ஆன்டனியை காதலித்து வந்திருக்கும் விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

இதை அடுத்து தனது இத்தனை வருட காதலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறாரே என்று ரசிகர்கள் பலரும் புலம்பி வருவதோடு மட்டுமல்லாமல் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். 

மேலும் அந்த ஆண்டனி தட்டில் யார் என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்ததை அடுத்து அவர் துபாயில் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வரக்கூடிய விஷயம் தெரிந்துள்ளது. 

மேலும் அவரின் குடும்பம் பாஜகவில் இருப்பதாக கூறப்படுவதோடு துபாயில் மட்டுமல்லாமல் சென்னையிலும் இவருக்கு இரண்டு கம்பெனிகள் உள்ளதாக செய்திகள் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. 

என் நிலையில் கீர்த்தி சுரேஷின் காதலர் தன்னை பற்றி வெளியில் எந்த விவரமும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக விஷயங்களை பரம ரகசியங்களாக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் அடிப்படையில் அவர் பொறியாளர் என்றும் கொச்சியில் ஏகப்பட்ட ரெஸ்டாரண்டுகளை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. 

அத்தோடு பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் அவருக்கு சொத்துக்கள் இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க அடித்துள்ளது.

LATEST News

Trending News