டீன் ஏஜ்-க்கு பை.. பை.. 20-வதை தொட்ட அனிகா சுரேந்தரன்.. செம வைப் போட்டோஸ்..
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அவதரித்து அதனை அடுத்து ஹீரோயினியாக பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன். தற்போது தன்னுடைய இருபதாவது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தனது டீன் ஏஜுக்கு பை, பை சொல்லி விட்டு இருபதாவது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் இவர் தன்னுடைய பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடி ரசிகர்களின் மனதில் ஒரு வித வைப்பை ஏற்படுத்திவிட்டார்.
மலையாள திரைப்படத்தில் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்களின் மூலம் அஜீத்தின் ரியல் மகளாக அழைக்கப்படுபவர்.
இதை அடுத்து தன்னைச் சுற்றி ஒரு குழந்தை நட்சத்திர பிம்பம் இருப்பதால் அனைவரும் தன்னை ஹீரோயினியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ? என்ற பயத்தில் இணையதள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு திணற விடுவார்.
அந்த வகையில் இவர் தனது இருபதாவது பிறந்த நாள் விழா புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வெளியிட்டு பலரது மனதிலும் இடம் பிடித்து விட்டார் என்று சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் இவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நயன்தாராவின் சிறிய வயது கேரக்டரோடை செய்து அனைவரையும் அசத்தினார். ஜெயம் ரவியோடு மிருதன், விஜய் சேதுபதியோடு மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கூடிய இவர் தெலுங்கில் ஹீரோயினியாகவும் நடித்திருக்கிறார்.
இளம் வயதிலேயே லிப் லாக் காட்சிகளில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிரவிட்ட இவர் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த பிடி சார் திரைப்படத்தில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக வைத்து எடுத்துள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த வருகிறார்.இது விரைவில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் தான் இவர் வெளியிட்டு இருக்கும் இருபதாவது பிறந்த நாள் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் ஆசையோடு பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறது.