கல்யாணம்னு சொன்னாலே பயமா இருக்கு.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பூனம் பாண்டே..
திரை உலக்கில் தற்போது அதிகரித்து வரும் நட்சத்திர தம்பதிகள் மத்தியிலான விவாகரத்துக்கள் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. தனுஷ் ஐஸ்வர்யா துவங்கி தற்போது ஏ ஆர் ரகுமான் வரை இந்த விவகாரம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் திரைத்துறையில் ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கக்கூடிய வகையில் அரை குறை ஆடையோடு ஆட்டம் போட்டு ரசிகர்களை உறைய வைக்கும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழும் இவர் ரியாலிட்டி ஷோவில் தனது அபார திறமையை காட்டியவர். இந்நிலையில் தான் இறந்து விட்டதாக பொய் விளம்பரம் கொடுத்து ஒரே நாளில் மீடியாவையும் ரசிகர்களையும் அதிரவிட்டவர்.
இதை அடுத்து அது ஒரு பேக் டெத் என தெரிந்ததும் பலரும் அவரை வறுத்து எடுத்ததோடு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வை தூண்டத்தான் இப்படி செய்தேன் என்று மன்னிப்பு கேட்டு வீடியோக்களை வெளியிட்டார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி instagram பக்கத்தில் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திருமணம் ஆகி 13 நாள் ஆன நிலையில் கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் தன் கணவர் தன்னிடம் அத்துமீறி தன்னை பலப்படுத்த படுத்தி ஒரு மிருகம் போல் நடந்து கொள்வதாக போலீசில் புகார் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது கங்கணா இரணாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பின்னர் மீண்டும் பாலிவுட் செலிபிரடியாக வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பாண்டே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் திருமணம் குறித்த கேள்வியை எழுப்பினார்கள்.
அந்தக் கேள்வியை குறித்தது கேட்டதும் அதிர்ந்து போன பூனம் பாண்டே தற்போது அதிகரித்து இருக்கக்கூடிய விவாகரத்துகள் பற்றி சொன்னதோடு அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் திருமணம் எப்படி ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்க முடியும் என்ற கேள்வியை முன் வைத்தார்.
அத்தோடு தான் மறுமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் சிங்கிளாகவே பிடித்த வாழ்க்கையை பிடித்தவர்களுடன் வாழ முடிவுசெய்திருப்பதை தன் பேச்சால் உணர்த்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள்.
அடுத்து திருமணம் குறித்து இவர் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.