தனுஷ் விவகாரத்தை கலாய்த்த நயன்தாரா? வைரலான இன்ஸ்டா பதிவு..
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷோடு ஏற்பட்ட மோதலை அடுத்து இருவரும் எதிரும் புதிரும் ஆக அடித்துக் கொள்வதும் அறிக்கைகள் விடுவதும் இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து சினிமாவின் ஹாட் டாபிக்காக தற்போது இருப்பது இவர்களின் விவகாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த விவகாரத்திற்கு காரணம் Nayanthara beyond the fairy tale என்ற ஆவண திரைப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் சில பகுதிகளை add செய்ய என் ஓ சி தர மறுத்ததை அடுத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதைத்தொடர்ந்து அந்த ஆவணப்படத்தில் பட பாடலை பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளரான தனுஷ் அனுமதி தராததோடு டீசரில் இடம் பிடித்த அந்த காட்சிகளை பார்த்து 10 கோடி அளவில் நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனுஷை சரமாரியாக தாக்கக் கூடிய வகையில் மூன்று பக்க அறிக்கையை ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்த நடிகை நயன்தாரா இட்லி கடை தயாரிப்பாளர் திருமணத்தில் கலந்து கொண்ட போது நீலாம்பரியாய் மாறி தனுசுக்கு நேர் எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்து கலக்கிய புகைப்படங்கள் இணையம் எங்கும் வெளிவந்தது.
இதனை அடுத்து தனுஷ் நயனின் மீது வழக்கினை பதிவு செய்து அந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வேளையில்நெட்பிளக்ஸ் நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததை அடுத்து இதற்கு தக்க பதில் அளிக்க வேண்டும் என நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து சட்டரீதியாக தனுஷ் விவாகரத்து பெற்றதை அடுத்தும் தண்ணீர் வழக்கு தொடர்ந்ததை வைத்து மறைமுகமாக அவரை தாக்கக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.
அந்த ஸ்டோரியில் நீங்கள் பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை அளிக்கும் போது அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வட்டியோடு திரும்பி வரும் என்று கோடிட்டு கர்மா சொன்னதாக சொல்லி இருக்கிறார்.