அட்டர் காப்பி அடித்த தமன்!! கேம் சேஞ்சர் பாட்டால் அடிவாங்கும் இயக்குநர் ஷங்கர்..
பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்று வந்தது.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் ராம் சரண், நடிகை கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜேம் சேஞ்ஜர் படம் உருவாகியுள்ளது.
வரும் 2025 ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் எதிர்ப்பார்ப்பை டீசர் அதிகரித்தது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தில் Lyraanaa பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
பாடல் வெளியானதும் நெட்டிசன்கள் சில நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் படத்தின் இசையை நடிகர் மாதவன் நடித்த விளம்பர படத்தின் இசையை பயன்படுத்தப்பட்டதாக கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Idhaan macha naan kandupudchadhu. pic.twitter.com/il1rPsgKdg
— Karun (@Karuna821997) November 28, 2024