ரசிகர்களின் சொர்க்கமாக மாறியதா? சொர்க்கவாசல்.. அதகளப்படுத்தினாரா ஆர் ஜே பாலாஜி?

ரசிகர்களின் சொர்க்கமாக மாறியதா? சொர்க்கவாசல்.. அதகளப்படுத்தினாரா ஆர் ஜே பாலாஜி?

சித்தார்த் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜிஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் சொர்க்கவாசல். இவர் ஆரம்ப காலத்தில் ஆர்ஜேவாக பணியாற்றியதை அடுத்து படிப்படியாக காமெடி நடிகனாக திரை உலகை நடித்து இன்று ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். 

எல் கே ஜி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் அந்த படத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்து படங்களான மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம் போன்ற படங்களையும் இயக்கியதோடு அந்த படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். 

அந்த வகையில் இவர் அடுத்ததாக சூர்யா 45 படத்தை இயக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்து வெளி வந்த திரைப்படம் சொர்க்கவாசல் என்று திரையரங்குகளில் காட்சிக்கு வந்துள்ளது. 

இயக்குனர் சித்தார்த் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த படம் இயக்குனர் சித்தாந்தத்தின் முதல் படமாகும். இவர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருப்பதாக சித்தார்த் கூறியிருக்கிறார். 

மேலும் சொர்க்கவாசல் படத்தில் சானியா ஐயப்பன் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் இந்த படத்தின் எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை இந்த தொகுப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இந்தப் படமானது 1999 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதும் செய்யாத தவறுக்காக சிறையில் சிக்கிக் கொள்ளும் ஒரு கைதியை பற்றிய கதைதான் கதையின் கதை கருவாக உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES