காந்தப்பார்வையில் மயக்கும் கண்கள்!! பாரதி கண்ணம்மா ரோஷினியின் க்யூட் ரீல்ஸ்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பாரதி கண்ணம்மா" சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரோஷினி. இதற்குப் பிறகு, அவர் "குக் வித் கோமாளி" சீசன் 3 -ல் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சூரி நடிப்பில் வெளிவந்த "கருடன்" படத்தில் ரோஷினி, உன்னி முகுந்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரோஷினி, தற்போது மொட்டைமாடியில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.