நயன் ரூட்டில் பிரியா பவானி ஷங்கர்..! சொன்னா புரிஞ்சுக்கோமா நீ லேடி சூப்பர் ஸ்டார் இல்ல..! புலம்பும் திரையுலகம்..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர் சத்யராஜ் சத்யதேவ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜீப்ரா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் முதல் நாள் வசூல் சரியாக கிடைக்காத நிலையில் படத்தைப் பார்த்து விட்டு விமர்சனங்கள் வெளி வந்ததை அடுத்து தியேட்டர்களில் படம் சூடு பிடித்து தற்போது ஓடி வருகிறது.
அந்த வகையில் புதிய படத்தில் ஹீரோயினியை கமிட் செய்யும் போது பிரமோஷனுக்கு வருவார்களா? இல்லையா? என்று தெளிவாக அக்ரிமெண்ட் போட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நேற்று சக்சஸ் மேட்டில் பேசிய பேசு தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணம் இந்த படத்தின் நாயகன் சத்ய தேவ் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பல பட பிரபலங்கள் பிரமோஷனுக்கு வருகை தந்த நிலையில் பிரியா பவானி சங்கர் மட்டும் பிரமோஷனுக்கு வரவில்லை.
மேலும் தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவரை பிரமோஷனுக்கு அழைத்தால் பல லட்சம் செலவாகும் என்று எண்ணிய பட குழு விமான டிக்கெட் உட்பட பல செலவுகள் உள்ளதாக சொல்லி அதனால் தான் அவர் வரவில்லை என்ற கருத்தை ஓபன் ஆக போட்டு உடைத்து விட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் இந்த வயதிலும் பட ப்ரொமோஷன்கள் மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது போன்றவற்றிற்கு அவரை சென்று வருகிறார்.
ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் தனது பட தயாரிப்பு தவிர மற்ற பட தயாரிப்புகளுக்கு எந்தவிதமான ப்ரமோஷனுக்கும் செல்லுவதில்லை. அதே பாணியை தான் தற்போது பிரியா பவானி சங்கர் கையில் எடுத்திருக்கிறாரா? என்ற கேள்வியும் வைத்து விட்டார்.
இதைத்தொடர்ந்து ஜீப்ரா பட சக்சஸ் மீட்டிங்கு வராத பிரியா பவானி சங்கரை தான் மறைமுகமாக பட குழு தாக்கி பேசி இருப்பதாகவும் இந்த பேச்சு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நடந்ததாகவும் சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து நடிகை பிரியா பவானி சங்கர் பெயரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நிலையில் அவர் வர மாட்டேன் என்று சொல்லவில்லை. அவரை அழைத்தால் ஏற்படும் செலவுக்கு பதிலாக அந்த பணத்தை பிரமோசனுக்கு செலவழித்து விடுவேன் என்று மலுப்பியும் விட்டார்.
இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி சங்கர் டிக்கெட் போட்டு இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால் அவரை மட்டும் அழைக்க முடியாது. அவரது டீம் மொத்தமும் வரவேண்டும் அதற்கு 20 முதல் 25 லட்சங்கள் வரை செலவாகும் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரத்தினம், இந்தியன் 2, டிமான்டி காலனி 2, பிளாக் மற்றும் ஜீப்ரா என இது வரை ஐந்து படங்கள் வெளிவந்து உள்ள நிலையில் இன்னும் பல பட வாய்ப்புகளை கைவசம் வைத்திருப்பதால் புரமோஷனை தவிர்த்து வருகிறாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.