திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பின் சட்டபூர்வ விவாகரத்து!! மகிழ்ச்சியில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் வளர்ந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வாழ்வதாக அறிக்கை வெளியிட்டார்கள் தனுஷ் - ஐஸ்வர்யா.
மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகி, விவாகரத்து வேண்டும் என்று நீதிபதியிடம் கூறியிருக்கிறார்கள்.
இதன்பின், இருவரும் விவாரகத்து வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதால் நவம்பர் 27 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தனர். இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் 2004 நவம்பர் 18ல் நடந்த திருமண பதிவை ரத்து செய்து நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டுள்ளார்.