GOLDEN SPARROW.. நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம்.. வசியம் செய்த சுஜிதா..!
சீரியல் நடிகை சுஜிதா தன்னுடைய குழந்தை பருவத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்ததின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் தற்போது வரை சீரியல் நடித்து கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பிறமொழி சீரியல்களிலும் நடித்து கலக்கி இருக்கிறார்.
சமீப காலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
இந்த சீரியலால் சுஜிதாவின் புகழ் மேலும் அதிகரித்தது. பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி, ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை உள்ளிட்ட பிரபலமான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர் விளம்பர வீடியோக்களை தயாரிக்கும் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இயல்பான நடிப்பு அழகான தோற்றம் என ரசிகர்களை கவரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.