“தன்னுடைய தாய்ப்பாலை ட்ரைவரிடம் கொடுத்து..” காஜல் அகர்வால் செய்த தரமான செயல்..!
தமிழ் தெலுங்கு என இரண்டு புலிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலருமான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயுமான நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி விடுவார் காஜல் அகர்வால் என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் பழைய வேகத்துடன் நடிக்க தொடங்கினார்.
குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி காணப்பட்ட நடிகை காஜல் அகர்வால் உடனடியாக உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறினார். மேலும், குழந்தை பிறந்த கையோடு திரைப்படங்களின் நடிக்க கேட்ட போது முடிந்த வரை சில படங்களில் நடிப்பதை தவிர்த்து இருக்கிறார்.
ஆனால், தெலுங்கு திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்திருக்கிறது. அதை தவிர்க்க முடியாமல் தவித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
திருப்பதியில் இருந்து கிட்டத்தட்ட 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய தூரத்தில் ஒரு சிறு கிராமத்தில் அந்த படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அந்த கிராமத்திற்கு தன்னுடைய குழந்தையோடு செல்ல முடியாது என்ற காரணத்தினால் தன்னுடைய குழந்தையை திருப்பதி வரை அழைத்து வந்து தன்னுடைய பெற்றோருடன் தங்க வைத்துவிட்டு இந்த கிராம பகுதிக்கு படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார்.
செல்லும் வழியில் இரண்டு மணி நேர பயண தூரத்தில் ஒரு இடத்தில் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடைய தாய்ப்பாலை எடுத்து ஒரு கார் டிரைவரிடம் கொடுத்து தன்னுடைய தாய்ப்பாலை அனுப்பி இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு அங்கு தன்னுடைய தாய்ப்பாலை எடுத்து வேறு ஒரு டிரைவரிடம் கொடுத்து தன்னுடைய குழந்தைக்கு அனுப்பி இருக்கிறார்.
இப்படி இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என தன்னுடைய குழந்தைக்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடியே தாய்ப்பாலை அனுப்பி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே பேசி இருக்கிறார். நான் என்னதான் பிஸியாக இருந்தாலும் என்னுடைய குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்தாக வேண்டும் என பேசி இருக்கிறார்.
அழகு கெட்டுவிடும் என்ற காரணத்தினால் இன்று பல பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதையே தவிர்க்கும் பெண்கள் இருக்கும் இந்த காலத்தில் நடிகை காஜல் அகர்வால் இந்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.