தங்கம் போல் ஜொலிக்கும் 21 வயது நடிகை க்ரீத்தி ஷெட்டி.. அவர் அழகின் ரகசியம் இதுதான்
தெலுங்கில் வெளிவந்த உப்பெனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் க்ரீத்தி ஷெட்டி.
இவர் தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் LIK படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 21 வயதாகும் நடிகை க்ரீத்தி ஷெட்டியின் அழகிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அழகின் ரகசியம் குறித்து நடிகை க்ரீத்தி ஷெட்டி வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதில் "நான் சர்க்கரை சாப்பிட மாட்டேன். சர்க்கரை எடுத்துக்கொள்ளாததால், எனது தோலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அழகுசாதன பொருட்களை போட்டுக்கொள்வதை விட, இது மிகவும் சிறப்பாக இருக்கிறது" என கூறியுள்ளார்.