தவறாக அத்துமீற முயன்ற நடிகர்!! படப்பிடிப்பில் நடிகை குஷ்பூ செய்த செயல்..

தவறாக அத்துமீற முயன்ற நடிகர்!! படப்பிடிப்பில் நடிகை குஷ்பூ செய்த செயல்..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் நடிகை குஷ்பூவும் ஒருவர். ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்பூ தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்திற்காக ஜப்பான் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தவறாக அத்துமீற முயன்ற நடிகர்!! படப்பிடிப்பில் நடிகை குஷ்பூ செய்த செயல்.. | Actor Misbehaved On Shooting Spot Kushboo Open

கேரளாவில் நடந்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் சமீபத்தில் குஷ்பூ பேசியுள்ளார். பெண்களுக்கு சினிமாவில் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு, திரைத்துரையில் மட்டுமின்றும் எங்கு எங்கு எல்லாம் பெண்கள் பணியாற்றுகிறார்களோ அங்கெல்லாம் பெண்கள் சவால்களை சந்தித்து வருகிறார்கள்.

யாரோ ஒருவர் தங்களிடம் தவறாக, அத்துமீறி நடந்துக்கொள்ளும் போது பெண்கள் அதுகுறித்து எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும், இதில் பெண்களுக்கு எந்தவிதமான அச்ச உணர்வும் இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

தவறாக அத்துமீற முயன்ற நடிகர்!! படப்பிடிப்பில் நடிகை குஷ்பூ செய்த செயல்.. | Actor Misbehaved On Shooting Spot Kushboo Openமேலும் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஹீரோ தன்னிடம் தவறான எண்ணத்தோடு என்னிடம் நெருங்கிய போது அந்நேரம் நான் பயப்படாமல் துணிந்து அந்த நடிகரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினேன்.

அதன்பின் அந்த நடிகர் என்மீது ஒரு பயம் இருந்ததால் என்னிடம் தள்ளியே இருந்தார், இந்த தைரியம் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். குஷ்பூவிடம் எந்த நடிகர் இப்படி தப்பாக நடந்து கொண்டார் என்ற விஷயத்தை கூறாத நிலையில் திரையுலகில் மீண்டும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது.

LATEST News

Trending News