பழைய கிளாமர் ஃபார்ம்க்கு வந்த நடிகை அமலா பால்!! அட்டகாசமான புகைப்படம்..

பழைய கிளாமர் ஃபார்ம்க்கு வந்த நடிகை அமலா பால்!! அட்டகாசமான புகைப்படம்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்து வந்தார் பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் விவாகரத்து ஆனது. பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 

சமீபத்தில் லெவல் கிராஸ் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இப்படத்தின் குழுவினருடன் கோவாவில் நடைபெறவுள்ள IFFI விழா நிகழ்ச்சிக்கு அமலா பால் சென்றுள்ளார். அங்கு கிளாமர் உடையணிந்து சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

பழைய ஃபார்ம்-க்கு வந்துவிட்டாரே அமலா பால் என்று ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு ஹார்ட்டின் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

LATEST News

Trending News