அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் லுக்கில் நடிகை வாணி போஜன்!! ஸ்டைலிஷ் போட்டோஷூட்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். செங்கமலம், சட்னி சாம்பார் உள்ளிட்ட ஓடிடி தள படங்களில் வாணி போஜன் நடிப்பில் வெளியாகியது.
தற்போது ஆர்யன், கேசினோ, பகைவருக்கு அருவாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன் ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்த கவர்ச்சிகரமான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.