சமந்தா போன்று அந்த பாடலுக்கு ஆட வேண்டும்.. ஓப்பனாக கூறிய பிரபல நடிகை

சமந்தா போன்று அந்த பாடலுக்கு ஆட வேண்டும்.. ஓப்பனாக கூறிய பிரபல நடிகை

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இவர் தமிழில் பொன் ஒன்று கண்டேன், பொன்னியின் செல்வன் 2, கார்கி, கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

இதில், பூங்குழலி கதாபாத்திரத்தில் இவர் நடித்து வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமந்தா போன்று அந்த பாடலுக்கு ஆட வேண்டும்.. ஓப்பனாக கூறிய பிரபல நடிகை | Actress Says She Wants To Act Like Samantha

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிகை சமந்தா குறித்தும் பொன்னியின் செல்வன் படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், " பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் தான் எனக்கு உடல் பாகங்கள் மூலமாகவும் நடிப்பை வெளிப்படுத்தலாம் என்று தெரியவந்தது. தற்போது, எந்த ரோல் கொடுத்தாலும் நான் அதனை ஏற்று சிறப்பாக நடிப்பேன்.

கடின உழைப்பு தான் சினிமாவில் நிலைத்து இருக்க காரணமாக உள்ளது என்பதை நடிகை சமந்தாவை பார்த்து தான் கற்று கொண்டேன்.

சமந்தா போன்று அந்த பாடலுக்கு ஆட வேண்டும்.. ஓப்பனாக கூறிய பிரபல நடிகை | Actress Says She Wants To Act Like Samantha

சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு கொடுத்த அர்ப்பணிப்புதான் அவரது வெற்றிக்கு காரணம். தற்போது 'ஊ சொல்றியா' போன்ற பாடலுக்கு நடனமாடவும் நான் தயாராகி விட்டேன்" என்று கூறியுள்ளார். 

LATEST News

Trending News