உங்க பெண் குழந்தைகளுக்கு இதை பண்ணுவீங்களா..? மீனா, குஷ்பூவை விளாசும் நெட்டிசன்கள்..!
கடந்த சில மாதங்களாக இணைய பக்கங்களில் விவாதத்திற்குரிய பொருளாக இருப்பது பிரபல நடிகர் நெப்போலியன் அவர்களுடைய மூத்த மகன் தனுஷ் என்பவருக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் நடக்க உள்ள திருமணம் பற்றி தான்.
இருவரும் மணமொத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று பலரும் இந்த திருமணத்திற்கு ஆதரவாகவும் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.
அதே நேரம் ஒரு ஏழை பெண் என்பதால் அவருக்கு தசை சிதைவு நோய் உள்ள ஒரு நபரை திருமணம் செய்து வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை. பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்குவதா..? என்றெல்லாம் விவாதங்களை பார்க்க முடிகிறது.
இப்படி விவாதம் செய்யும் நபர்களின் முக்கியமான கேள்வி என்னவென்றால்.. நடிகர் நெப்போலியன் தன்னுடைய இளைய மகனுக்கு இப்படி ஒரு ஏழை பெண்ணை திருமணம் முடித்து வைக்க சம்மதிப்பாரா..? அல்லது, தனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் இப்படி ஒரு விசித்திரமான நோயுடன் இருக்கும் ஒரு ஆணுக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பாரா..?
ஏழை பணம் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கலாமா..? என்பது தான். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இணைய பக்கங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிற மறுபக்கம் திருமணத்தில் கலந்து கொண்டு சென்றிருந்த நடிகைகளின் நடிகை குஷ்பூ, மீனா இருவரும் நேர்காணல் ஒன்றில் இந்த திருமணம் குறித்து தங்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
அவர்கள் கூறியதாவது, இந்த திருமணம் இருவரின் சம்மதத்தின் பெயரில் தான் நடக்கிறது. தனுஷை மணமகனாக ஏற்க அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்கள்.
இதனால், கடுமையான கோபத்திற்கு ஆளாக இருக்கிறார்கள் நெட்டிசன்கள். உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கிறது. உங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை இப்படி ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா..? எந்த அடிப்படையில் தனுஷை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
பணம் மட்டும் தான். வேறு என்ன இருந்து விடப் போகிறது..? உங்களுக்கு பிறந்த மகள்களை இப்படி ஒரு நபருக்கு நீங்கள் திருமணம் செய்து வைத்து விட்டு இந்த திருமணம் குறித்து பொதுவெளியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள்.
என்னதான் நீங்கள் ஊடகங்களில் இந்த திருமணத்தை சுற்றி இருக்கும் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக மேக்கப் போட்டாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடித்திருக்கிறீர்கள் என்பதை எங்கும் உங்களால் மறைக்க முடியாது.
அவ்வளவு ஏன்..? அவர்கள் தற்போது குடியிருக்கும் அமெரிக்காவில் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்களுடைய திருமணம் செல்லாது என்பதால் தான் ஜப்பானில் இந்த திருமணத்தை செய்திருக்கிறீர்கள் என்று நடிகை மீனா மற்றும் குஷ்பூவையும் சேர்த்து இந்த விவகாரத்தில் விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.