பேட்டியிலேயே மாமியார் கொடுமை செய்றாங்க.. ஷாரிக் மனைவி மரியா ஓப்பன் டாக்..

பேட்டியிலேயே மாமியார் கொடுமை செய்றாங்க.. ஷாரிக் மனைவி மரியா ஓப்பன் டாக்..

திரையுலகில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் ரியாஸ் கான் மற்றும் அவர் மனைவி உமா ரியாஸ் கான். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ஷாரிக். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார்.

பேட்டியிலேயே மாமியார் கொடுமை செய்றாங்க.. ஷாரிக் மனைவி மரியா ஓப்பன் டாக்.. | Shariq Maria New Interview With Shariqs Parentsமேலும்,பென்சில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

ஜெனிஃபருக்கு அவர் முதல் கணவர் மூலம் ஜாரா என்ற 8 வயது மகள் உள்ளார். ஆனால், அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் ஷாரிக் ஜெனிஃபரை திருமணம் செய்து கொண்டார்.

ஷாரிக்கை திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மனைவி மரியா அளித்த பேட்டியில், மறுமணம் செய்துக் கொண்டால் தன்னுடைய மகளை கணவர் குடுமபத்தினர் ஏற்க மாட்டார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் ஷாரிக்கும் சரி அவரது பெற்றோரும் தன் மகளை சிறப்பாக பார்த்துக் கொள்வதாகவும் ஷாரிக் சிறப்பான தந்தையாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், மரியாவின் மாமியார் உமா ரியாஷ் பேசுகையில், தமிழில் பேசுமாறு கூற, தன்னுடைய தமிழ் அந்த அளவிற்கு இருக்காது என்று கூறிய மரியா, மாமியார் கொடுமை செய்வதாக காமெடியாக கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News