விஜய்யின் முதல் மாநாடு.. பெயரை சொல்லாமல் மறைமுகமாக வாழ்த்து கூறிய முன்னணி நடிகர்
நடிகர் விஜய் நடிப்பை தவிர்த்துவிட்டு கடைசி தளபதி 69 படத்தோடு சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கான முழு பணிகளில் ஈடுபடவுள்ளார்.
அதற்காக விக்கிரவாண்டியில் வி. சாலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை திட்டமிட்டுள்ளார். இன்று பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் பல கோடி ரசிகர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளார்கள்.
அதற்காக, இப்போதே பலர் தங்கள் சொந்த ஊரில் இருந்து கிளம்பி வருவதை நம்மால் காண முடிகிறது. இன்று விஜய் நடத்தும் அவர் முதல் மாநாட்டிற்கு பல சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய சூர்யா, விஜய்யின் முதல் மாநாடு குறித்து மறைமுகமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ""இன்னொரு நண்பர் உள்ளார், ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்கார் அவரோட வரவு நல்வரவாக இருக்க எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.