மனிதர்கள் வேண்டாமாம், இந்த ஒரு விஷயம் மட்டும் போதும்.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அதிர்ச்சி பதிவு
நடிகை த்ரிஷா 41 வயதிலும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
அவரை சுற்றி எப்போதும் பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. அவரது திருமணம் பற்றியும் பல கிசுகிசுக்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது.
ஆனால், அவற்றுக்கெல்லாம் கவலை படாமல் அவரது பணியில் கவனம் செலுத்தி வருகிறார். லியோ, கோட் படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவு செய்துள்ள விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன், நாய்களை நேசிக்கிறேன். என்னுடை நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது, மனிதர்களை நேசிக்கிறது.
நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்" என பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,