28 ஆயிரம் கோடி மோசடி நீரவ் மோடி!! மியூசிக் கடையை 47 கோடிக்கு வாங்கிய தனுஷ் பட நடிகை..

28 ஆயிரம் கோடி மோசடி நீரவ் மோடி!! மியூசிக் கடையை 47 கோடிக்கு வாங்கிய தனுஷ் பட நடிகை..

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட இந்தியாவில் இருக்கும் அரசு வங்கிகளில் சுமார் ரூ. 28 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திரும்ப கட்டாமல் பிரிட்டனுக்கு சென்று தங்கி இருக்கும் ஏமாற்றியவர் நீரவ் மோடி.

28 ஆயிரம் கோடி மோசடி நீரவ் மோடி!! மியூசிக் கடையை 47 கோடிக்கு வாங்கிய தனுஷ் பட நடிகை.. | Sonam Kapoor Buys 47 Crores Nirav Modis Music Shopவைர வியாபாரி நீரவ் மோடியின் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களை அமலாக்கபிரிவினர் கையகப்படுத்தி விற்பனை செய்து வந்தனர். 

2018ல் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பின் தான் இந்த மோசடி விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணை நடந்தி வருகிறார்கள். 

இந்நிலையில் நீரவ் மோடியின் மும்பையில் இருக்கும் மியூசிக் ஸ்டோர் என்ற ரிதம் ஹவுஸ் மும்பையின் காலகோட பகுதியில் 1940ல் திறக்கப்பட்டது. 

இக்கடையை அமலாக்கப்பிரிவினர் கடந்த 2020ல் கையகப்படுத்தி அதில் வரும் பணத்தை நீரவ் மோடிக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு கொடுக்கும் படி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்திரவிட்டது.

28 ஆயிரம் கோடி மோசடி நீரவ் மோடி!! மியூசிக் கடையை 47 கோடிக்கு வாங்கிய தனுஷ் பட நடிகை.. | Sonam Kapoor Buys 47 Crores Nirav Modis Music Shopஆனால் மியூசிக் அனைத்தும் டிஜிட்டல் மயமானதால் கடையில் வியாபாரம் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளாக அடைக்கப்பட்டது. 

தற்போது இக்கடையை பாலிவுட் நடிகை சோனம் கபூரும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜாவும் ரூ. 47.80 கோடிக்கு விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

சோனம் கபூரின் மாமனார் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தைநடத்தி வருவதால் அவரது சாஹி எக்ஸ்போட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பானே நிறுவனம் தான் இந்த கடையை வாங்கியிருக்கிறது.

இந்த கடையை மிகப்பெரிய ஜூவல்லரி ஸ்டோராக மாற்ற சோனம் கபூரும் அவரது குடும்பத்தினரும் திட்டமிட்டிருக்கிறார்களாம். சோனம் கபூர் நடிகை தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News