ஜோதிகாவுடன் பிரச்சனையா..யாரு சொன்னது!! சூர்யா மும்பை போக இதான் காரணமாம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த சூர்யா - ஜோதிகா, கடந்த 2006ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் காதலித்த போது சூர்யாவின் அப்பா ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின் பல ஆண்டுகள் கழித்து பச்சைக்கொடி காட்ட, இருவரின் வீட்டாரின் சம்மதத்தின் பெயரில் திருமணம் நடந்தது.
திருமணமாகி 17 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இருவருக்கும் கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதிலும் மும்பை சென்றதும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவதாகவும் சோசியல் மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் செட்டிலாக விஜயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அங்கு சென்றதாகவும் கடந்த சில காலமாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஜோதிகா மறுப்பு தெரிவித்த நிலையில் இன்னும் அந்த வதந்தி ஓய்ந்தபாடில்லை.
இப்படியிருக்க சில நாட்களுக்கு முன் ஜோதிகா பிறந்தநாள் கொண்டாடினார். அந்த நாளில் சூர்யா மும்பை ஏர்போர்ட்டில் நடிகை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது ஜோதிகா சூர்யாவுடன் ஏன் இல்லை, இரண்டு பேருக்கும் பிரச்சனை என்பது உறுதியாகிவிட்டதா என்று சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை, ஜோதிகாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தான் சூர்யா மும்பைக்கே சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கங்குவா படத்தின் பிரமோஷன் வேலைகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் ஜோதிகாவின் பிறந்தநாளில் இருக்க வேண்டும் என்பதற்காக அதை ஓரங்கட்டிவிட்டு மும்பைக்கு பறந்திருக்கிறார் சூர்யா என்று திரைத்துறையினர் கூறுகிறார்களாம்.
தற்போது கங்குவா படத்தின் ஆடியோ லான்ச்சிற்காக படக்குழுவினருடன் டெல்லி நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.