மகப்பேறு அறையில் தொப்புள் வெட்டும் காட்சி..மறுபடியும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..

மகப்பேறு அறையில் தொப்புள் வெட்டும் காட்சி..மறுபடியும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..

பல கடைகளுக்கு சென்று ருசித்து சாப்பிட்ட உணவுகளை தேடிச் சென்று சாப்பிட்டதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமானவர் தான் இர்ஃபான்.

உள்ளூர் கடைகள் முதல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு கடைகளுக்கு சென்று உணவை சுவைத்து ரிவ்யூ செய்து பெரியளவில் ஃபேமஸ் ஆனார் இர்ஃபான்.

மகப்பேறு அறையில் தொப்புள் வெட்டும் காட்சி..மறுபடியும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்.. | Youtuber Irfan Is Embroiled In Controversy Video

சமீபத்தில் தன் தனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிய துபாய்க்கு சென்று டெஸ்ட் எடுத்து தெரிந்துகொண்டு அதையே விழா வைத்து கொண்டாடியது சர்ச்சைக்குள்ளானது.

வீடியோவை வெளியிட்டதால் சட்டரீதியாக எதிர்கொண்ட நிலையில், அந்த வீடியோவை டெலீட் செய்தார் இர்பான். ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியோடு அறிவித்திருந்தார்.

குழந்தை பிறந்து 3 மாதங்களான நிலையில் மனைவியின் பிரசவ வீடியோவை இர்ஃபான் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இர்ஃபான் மனைவி ஆலியாவுக்கு தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது.

மகப்பேறு அறையில் தொப்புள் வெட்டும் காட்சி..மறுபடியும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்.. | Youtuber Irfan Is Embroiled In Controversy Video

குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் இருந்த இர்பான், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் போது வீடியோ எடுத்த அந்த காட்சியை யூடியூப்பில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES