ஜெயம் ரவியை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனுக்கும் விவாகரத்தா!! கணவர் கொடுத்த விளக்கம்..
சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்களில் விவாகரத்து விஷயங்கள் தற்போது அதிகரித்து வருவது கோலிவுட்டையே அதிரவைத்து வருகிறது. சமீபத்தில் ஜிவி பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விஷயங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் அவரது கணவர் கிருஷ்ண வம்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்களுக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது என கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும், கணவர் வம்சி ஹைதராபாத்திலும் வசித்து வருகிறார்கள். இதைவைத்து தான் இந்த பேச்சு துவங்க ஆரம்பித்தது.
இது முழுக்க முழுக்க வதந்திகள் தான், யார் பார்த்துவிட்ட வேலை என்று தெரியவில்லை, அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள், நானும், ரம்யா கிருஷ்ணனும் பிரியவில்லை.
நாங்கள் விவாகரத்து பெறவில்லை. வேலை காரணமாக நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். அவ்வளவு தான். உடனே விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்வதை கேட்கும்போது வேதனை அளிக்கிறது.
ரம்யா ஒரு நல்ல மனைவி, நல்ல அம்மா என்று ரம்யா கிருஷ்ணனின் கணவர் வம்சி சலித்துக்கொண்டு பேசியிருக்கிறார்