பிக் பாஸ் சினேகன் வீட்டில் நடந்த விஷேஷம்.. களைகட்டும் புகைப்படங்கள் இதோ

பிக் பாஸ் சினேகன் வீட்டில் நடந்த விஷேஷம்.. களைகட்டும் புகைப்படங்கள் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் சினேகன். இவர் இந்நிகழ்ச்சிக்குள் நுழைவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார், ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சுமார் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் அவர் நீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

பிக் பாஸ் சினேகன் வீட்டில் நடந்த விஷேஷம்.. களைகட்டும் புகைப்படங்கள் இதோ | Snehan Wife Baby Shower

சினிமா மட்டுமின்றி கமல்ஹாசனின் கட்சியிலும் ஒரு முக்கிய பொறுப்பில் சினேகன் இருந்து வருகிறார். கன்னிகா கர்ப்பமாக உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், கனிகாவின் 5 - வது மாத நிகழ்ச்சியை இந்த ஜோடி அழகாக நடத்தியுள்ளது. அதன் புகைப்படங்களை சினேகன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அழகிய புகைப்படங்கள் இதோ, 

 

LATEST News

Trending News