பார்க்க லட்டு போல் இருக்கும் நடிகை அமலா பாலின் குழந்தை.. க்யூட் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்து வந்தார்.
பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் விவாகரத்து ஆனது.
பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது
ஓணம் தின ஸ்பெஷலாக அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார்.
தற்போது தன் மகன் லட்டு போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குழந்தைக்கு சுத்தி போடுங்கள் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.