விவாகரத்தான பெண்களின் வாழ்க்கை கஷ்டம்!! நடிகை காயத்ரி ரகுராம் ஓப்பன் டாக்..

விவாகரத்தான பெண்களின் வாழ்க்கை கஷ்டம்!! நடிகை காயத்ரி ரகுராம் ஓப்பன் டாக்..

90ஸ் காலக்கட்டத்தில் நடிகையாகவும் நடன இயக்குநராகவும் திகழ்ந்து வந்த காயத்ரி ரகுராம், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ட்ரோல் மெட்டீரியலாகினார்.

விவாகரத்தான பெண்களின் வாழ்க்கை கஷ்டம்!! நடிகை காயத்ரி ரகுராம் ஓப்பன் டாக்.. | Gayathriraghuram About Difficulties Faced Divorcedதற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் காயத்ரி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விவாகரத்தான பெண் என்றால் சமூகத்தில் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு இருக்காது. அதுதான் உண்மை.

அவர்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பது ஒன்று, இன்னொன்று அவர்களை நாம் ஈசியாக தாக்கிவிடலாம் என்ற நினைப்பு ஆண்கள் மத்தியில் நிலவும். அந்தப்பெண் கேரக்டர் பற்றி அவதூறி பேச்சு உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பொறுத்தவரை சினிமாத்துறையில் மட்டுமின்றி பல்வேறு துறையிலும் இருக்கிறது. ஒரு பெண் விவாகரத்து பெற்றுவிட்டால் உடன் இருக்கும் நண்பர்களே அவளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள், சிலர் காப்பாற்றுவார்கள்.

விவாகரத்தான பெண்களின் வாழ்க்கை கஷ்டம்!! நடிகை காயத்ரி ரகுராம் ஓப்பன் டாக்.. | Gayathriraghuram About Difficulties Faced Divorcedசில பெண்கள், தன்னுடைய கணவரை அந்த மாதிரியான பெண்களோடு பழகவிடமாட்டார்கள். எனக்கு அப்பா கூட கிடையாது. ஆகையால், என்னை நான் ஒரு பெண்ணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும். கேரக்டரை ஒருவர் அவதூறாக பேசினால் நீங்கள் வீக் ஆகி விடுவீர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அப்படி கிடையாது. நீங்கள் தைரியமாக இருக்கலாம்.

பார்க்கிறவர்கள் பார்வை தவறாக இருந்தால் அது அவர்களின் பிரச்சினை. அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது என்று விவாகரத்து குறித்து பகிர்ந்துள்ளார் நடிகை காய்த்ரி ரகுராம்.

LATEST News

Trending News