ஜான்வி கபூரை எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறாங்க!! தேவரா பட இயக்குநர் ஓபன் டாக்..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்படத்தில் பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.
படம் செப்டம்பர் 27 ஆம்தேதி வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், கோல்டன் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கி வருவார்.
இந்நிலையில் ஜான்வி கபூர் பற்றி தேவரா படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா சில விஷயத்தை கூறியிருக்கிறார்.
வடக்கு , தெற்கு என்ற பாகுபாடு எல்லாம் எனக்கு கிடையாது. ஆனால் இங்குள்ள மக்கள் அனைவருமே ஜான்வி கபூரை தென்னிந்தியாவுக்கு சொந்தக்காரர் என்றுதான் நினைக்கிறார்கள். ஏனெனில் ஸ்ரீதேவியை தங்களுடையவர் என்று கருதுகிறார்கள்.
மேலும் கிராமத்தில் இருப்பவர்கள்கூட ஜான்வியை தங்கள் வீட்டு பெண் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார்.