நயன்தாராவாவின் அட்டூழியத்தால் கதறும் தயாரிப்பாளர்.. அதுவும் ஆயாக்களை வைத்தா..
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்திருக்கும் நடிகை நயன்தாரா, தற்போது 10 முதல் 12 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது பல கோடி சம்பளத்தை கேட்டும் அவரிடம் தயாரிப்பாளர்கள் செல்கிறார். அப்படி வருபவர்களின் கதையை கேட்டுவிட்டு கை நீட்டி அட்வான்ஸ் வாங்கிவிட்டால் குறித்த நேரத்தில் கால்ஷீட்டிற்கு ஏற்ப படத்தினை முடித்துக் கொடுத்துவிட்ட பின் தான் வேறு படத்திற்கு செல்வார்.
அப்படி நல்ல பெயர் வாங்கி வந்த நடிகை நயன் தாரா மீது பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார். தயாரிப்பாளர் மத்தியில் நயன் தாராவுக்கு நல்ல பெயர் இருந்தாலும் சம்பள விஷயத்தைல் கறார் காட்டுவதையுc படத்தின் பிரமோஷனுக்கு வரமாட்டேன் என்று கூறுவதையும் கண்டீசனாக வைத்திருக்கிறார்.
அதற்கு உடன்பட்டால் மட்டுமே படத்தில் நடிக்க சம்மதிப்பார். ஆனால் அதையும் சளித்துக்கொண்டு ஒரு தயாரிப்பாளர் கமிட் செய்து புலம்பியிருக்கிறார். அதாவது நயன் தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் லூட்டி குறித்து தான் தயாரிப்பாளர் ஆனந்தன் குற்றச்சாட்டியிருக்கிறார்.
தன் மகன்களை விட்டு பிரிந்திருக்க முடியாது என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே அழைத்து வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளரும் யூடியூபருமான ஆனந்தன் தெரிவித்தன் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
அதிலும் நயன் தாரா தன் குழந்தைகளுடன் சேர்த்து இரு ஆயாக்களையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வருகிறார். அதுமட்டுமின்றி இரு ஆயாக்களுக்குமான சம்பளத்தையும் தயாரிப்பாளர்கள் தான் வழங்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும், ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது நியாயமா? என்று கேள்வி எழுப்பியதோடு தன் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஆயாக்களை நீங்கள் கொண்டுவந்தல் நீங்கள் தானே சம்பளம் தரவேண்டும்? தயாரிப்பாளர் ஏன் பணம் கொடுக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.