என்னது அந்த நடிகர், He Is No More-ஆ.. நடிகர் ஜீவா கொடுத்த ஷாக்..

என்னது அந்த நடிகர், He Is No More-ஆ.. நடிகர் ஜீவா கொடுத்த ஷாக்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜீவா, தற்போது கே ஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் பிளாக் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

என்னது அந்த நடிகர், He is No More-ஆ.. நடிகர் ஜீவா கொடுத்த ஷாக்.. | Actor Jiiva Controversy Speech About Top Actor

இப்படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் பரத்வாஜ் ரங்கநாதன் எடுத்த பேட்டியொன்றில் கலந்துகொண்ட ஜீவா, முகமூடி, கோ படத்தில் நடந்த சில சம்பவங்களை கூறியிருக்கிறார். அதில், முகமூடி படத்தின் இரண்டாம் பாதி ரொம்பவும் மோசமாக இருக்கிறது மாற்றுங்கள் என்று மிஷ்கினிடம் கூறினேன்.

ஆனால் அவர்கள் கேட்கவே இல்லை. இந்த விஷயத்தில் கோட்டா சீனிவாச ராவிடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன், He is No More என்று கூறி, கோ படத்தில் ஒரு சீனை செய்ய சொல்லி கேட்டதும் வேண்டாம் என்று இயக்குநர் சொன்னதும் வேறு படத்தில் பண்ணிக்கிறேன் என்று சொன்னார் என ஜீவா தெரிவித்துள்ளார்.

என்னது அந்த நடிகர், He is No More-ஆ.. நடிகர் ஜீவா கொடுத்த ஷாக்.. | Actor Jiiva Controversy Speech About Top Actor

ஜீவா He is No More என்று கோட்டா சீனிவாச ராவ் பற்றி சொன்னதும் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார், ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கோட்டா சீனிவாச ராவ் உடல்நிலை சரியில்லாத போது அவர் மரணமடைந்துவிட்டார் என்ற வதந்திகள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News