அண்ணா வேணவே வேணாம்னு கெஞ்சிய சைந்தவி!! அந்த ரோலுக்காக வற்புறுத்தி கோட் பட இயக்குநர்..
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 8 நாட்களாகிய நிலை 348 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.
இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் இயக்குநர் வெங்கட் பிரபு, சமீபத்தில் பாடகி சைந்தவி பற்றிய சில கருத்தினை கூறியிருக்கிறார்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியில் நடுவராக பாடகி சைந்தவி இருந்து வருகிறார்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, சைந்தவியை சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும் என்றும் சென்னை 28 முதல் பாகத்தில் நடிகை விஜயலட்சுமி ரோலில் நடிக்க சைந்தவியை ரொம்ப கட்டாயப்படுத்தி நடிக்க கேட்டேன்.
எனக்கு நடிப்பு வரவே வராது அண்ணா, வேணவே வேண்டாம் தயவு செய்து விட்டுருங்கன்னு கெஞ்சி கேட்டாங்க என்று கூறியிருக்கிறார்.