“என்னை பெத்த அப்பாவே என் வீடியோவை பாத்து இதை சொன்னார்..” டிக்டாக் இலக்கியா கூறிய பகீர் தகவல்..!
டிக்டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கிளாமரான வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக்டாக் இலக்கியா.
சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் எடுத்திருக்கிறார். இரட்டை அர்த்த பாடல்களுக்கு மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு இணைய பக்கங்களில் பிரபலமான இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மட்டுமில்லாமல் சக டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூரியா என்பவரிடம் இவர் பேசிய தொலைபேசி ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
வெளிநாடுகளுக்கு சென்று பலான வேலைகளை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பது குறித்து சக tiktok பிரபலம் ரவுடி பேபி சூரியா என்பவர் இலக்கியாவுக்கு வழிகாட்டும் விதமாக பேசிய அந்த ஆடியோ மிகப்பெரிய அதிர்வுகளை கிளப்பியது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது அந்த ஆடியோவில் பேசியது நான் தான். அதில் பேசியதெல்லாம் உண்மைதான். ஆனால், அது எப்படி இணையத்தில் வெளியானது என்று எனக்கு தெரியவில்லை என பேசி இருந்தார்.
மட்டுமில்லாமல் இவருடைய பெயரை பயன்படுத்தி இணைய பக்கத்தில் சிலர் இலக்கியாவுடன் தனிமையில் இருக்க இவ்வளவு பணம் எனக் கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி இருக்கிறார்கள்.
இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இணைய பக்கங்களில் பதிவுகளை வெளியிட பதறிப் போனார் இலக்கியா. அதனை தொடர்ந்து தன் பெயரை பயன்படுத்தி பணத்தை ஏமாற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருந்தது மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பியது.
இப்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் நீந்தி கொண்டிருக்கும் இலக்கியா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியபோது சென்னைக்கு வந்த பொழுதில் என்னுடைய குடும்பத்தாருடன் நான் தொடர்பில் இல்லை. யாரும் என்னுடன் பேசவில்லை என பகீர் தகவலை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நானே என்னுடைய நாட்களை கஷ்டப்பட்டு நகர்த்திக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் என்னுடைய குடும்பத்தினர் என்னுடன் பேசினார்கள்.
என்னுடைய அப்பாவும் என்னுடன் பேசினார். என்னுடைய வீடியோக்களை எல்லாம் அவரும் பார்த்திருக்கிறார். பார்த்துவிட்டு இனிமேல் இப்படியான வீடியோ எல்லாம் பண்ணாத பாப்பா. இது நமக்கு செட்டாகாது என்று கூறினார்.
நானும் சரி என கூறினேன் என பதிவு செய்திருக்கிறார் இலக்கியா. அதற்கு ஏற்றார் போல இடையில் மோசமான வீடியோக்களை வெளியிடாமல் நாகரீகமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது மீண்டும் கிளாமரான வீடியோக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.