வலிமை பட முக்கிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

வலிமை பட முக்கிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தின் முக்கிய அப்டேட்டை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனிகபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
 

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை படம் வரும் 2022 ஆம் ஆண்டு  பொங்கலுக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LATEST News

Trending News