ரூ. 3.5 கோடி செலவில் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்த கார்.. இதுவரை வெளிவராத வீடியோ இதோ..
நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
சமீபத்தில் வந்த நயன்தாராவின் பிறந்தநாளுக்கு பரிசாக விலை உயர்ந்த Maybach சொகுசு கார் ஒன்றை விக்னேஷ் சிவன் கொடுத்திருந்தார்.
அதை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் நயன். அவர் வெளியிட்ட அந்த பதிவும் இணையத்தில் மிகவும் வைரலானது. இந்த காரின் விலை மட்டுமே ரூ. 3.5 கோடியாகும்.
இந்நிலையில் தற்போது அந்த காரை விக்னேஷ் சிவன் எப்படி நயன்தாராவிற்கு சர்ப்ரைஸாக கொடுத்தார் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு கலந்துகொண்டு நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
All about A Month Back💥🔥 #MAYBACH 🫶🏻 pic.twitter.com/tmcsTWWzI5
— Nayanthara✨ (@NayantharaU) December 17, 2023
பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. இப்படத்தில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.