தலைகீழாக யோகா செய்யும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்: வீடியோ வைரல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ளவர் என்பதும் குறிப்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் தலைகீழாக யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பதிவில் அவர் தனது யோகா டீச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.