கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணையும் மம்முட்டி..பட போஸ்டர் தரமா இருக்கே..

கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணையும் மம்முட்டி..பட போஸ்டர் தரமா இருக்கே..

கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படத்தினை இயக்க களமிறங்கியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் நேரடி தமிழ் படமா அல்லது மலையாளத்தில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்படவுள்ளதா, அல்லது மலையாளத்தில் மட்டுமே படம் ரிலீஸ் செய்யப்படுகின்றதா என்பது குறித்து இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் போஸ்டரைப் பார்க்கும்போது மம்முட்டி பெண்களின் பர்ஸ் மற்றும் ஹேண்ட் பேக்கினை திருடும் திருடன் கதாபாத்திரத்தில் நடிப்பாரோ என்ற சந்தேகம் எழுகின்றது.

இதுவா கதை? அதேபோல் போஸ்டரில் இடம் பெற்றுள்ள மற்ற விஷயங்களை பார்க்கும்போது, மம்முட்டி க்ரைம் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார் என்ற எண்ணமும் தோன்றுகின்றது. அதனால்தான் ஒரு ஆணின் புகைப்படத்தைச் சுற்றி நான்கு பெண்ணின் புகைப்படங்கள் இருக்கின்றது. மேலும் சில குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளது. படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்கின்றார். மம்முட்டியின் பிறந்த நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

mammootty gautham vasudev menon
 

LATEST News

Trending News

HOT GALLERIES