பிரபல ரௌடி கொடுத்த தொல்லை.. சினிமாவை விட்டு ஓடிய நடிகை..
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது இலைமறைவு காய் மறைவாக இருந்தநிலையில் தற்போது, அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகைகள், தைரியமாக வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் தமிழா தமிழா பாண்டியன் சினிமாவில் நடக்கும் அட்டூழியம் குறித்து பேசி உள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த அறிக்கையில் கேரளா சினிமாவில் பெண்கள் போக பொருளாக பார்க்கப்படுவதாகவும், நடிகைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், அதற்கு இடம் தராத நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், இதற்கு பயந்த சில பெண்கள், சினிமாவை விட்டு சென்றுவிடுவதாகவும் அந்த அறிக்கையில் இடம் பெற்று இருந்தது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை அளிக்க முன்வந்தனர்.
இதுகுறித்து, பேசிய தமிழா தமிழா பாண்டியன், ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டயை இதைத்தொடர்ந்து, பல நடிகைகள் அதில் புகார் அளித்து இருக்கிறார்கள். இந்த கமிஷன் என்ன செய்யும் அவர்களின் புகாரை வாங்கி வைத்துக்கொள்ளுமே தவிர, நடவடிக்கை எடுக்காது. ஹேமா கமிட்டிக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை. அது ஒரு பல்லு இல்லாத ஆணையம் என்றார்.
தொடர்ந்து பேசிய இவர், நடிகை நதியாவிற்கு தொடர்ந்து வீரமணி தொல்லை கொடுத்துவந்தார். இதுபற்றி சினிமாலயா எடிட்டர் எம்.ஜி.வள்ளவனிடம், நதியா புலம்பி இருக்கிறார். இதற்கு அவர் கொடுத்த ஐடியா இனிமேல் இங்கு இருக்காதே வெளிநாடு சென்றுவிடு என்று சொன்னார். நதியா தமிழ் சினிமாவைவிட்டு விலக காரணமே, அயோத்தி குப்பம் வீரமணி தான். அவரின் கட்டுப்பாட்டில் வர சொன்னார் இதற்கு இடம் கொடுக்காமல் நதியா வெளிநாடு சென்று செட்டிலாகிவிட்டார்.
அதே போல நடிகை ஸ்ரீவித்யா, கடைசி காலத்தில் உடல்நிலை மோசமாகி திருவனந்தபுரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். அதற்கு காரணம், அந்த அம்மா பல கஷ்டத்தை அனுபவித்தார்கள். திரைப்படத்துறை பொருத்தவரைக்கும், பல தடைகளைத்தாண்டித்தான் ஒரு இடத்திற்கு வர வேண்டும், அந்த இடத்திற்கு வரும் வரை பெரிய போராட்டம் தான். இப்படி சினிமாவில் நடக்கும் கொடுமைகளை ஒன்றுமே செய்ய முடியாது என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.