எல்லாமே டபுள் மீனிங்.. அசிங்கமா போயிருக்கும்.. சிம்புவும் வி.டி.வி கணேஷும் சேர்ந்து அடிச்ச கூத்து - வீடியோ!

எல்லாமே டபுள் மீனிங்.. அசிங்கமா போயிருக்கும்.. சிம்புவும் வி.டி.வி கணேஷும் சேர்ந்து அடிச்ச கூத்து - வீடியோ!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். நடிகர் சிம்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் தமிழ் சினிமா உலகில் இன்றுவரைக்கும் நிலவினாலும், தனது ரசிகர்களுக்காக அவர்களை திருப்தி அடையச் செய்ய பல்வேறு, முயற்சிகளை மேற்கொண்டு தன்னை வருத்திக் கொண்டு நடிப்பவர். இவர் தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்திற்காக தனது உடல் எடையை மிகவும் குறைத்து நடித்துள்ளார். நடிப்பது மட்டும் இல்லாமல், பாடல்கள் எழுதுவது, பாடுவது, வசனம் எழுதுவது, கதை திரைக்கதை அமைப்பது என சினிமாவின் அனைத்து துறைகளையும் கற்று அதனை வெளிப்படுத்தும் கலைஞன் சிம்பு.

இவரும் நடிகர் வி.டி.வி. கணேஷ் இணைந்து இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள உலக அதிசயமான கொலோசியத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது, அந்த இடத்தைச் சுற்றிப்பார்த்தபோது வீடியோ எடுத்துள்ளனர். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. குறிப்பாக நடிகர் வி.டி.வி. கணேஷ் பேசுபவை காண்போரை சிரிக்க வைக்கின்றது. அதேபோல் அவரது நடவடிக்கைகளும் காண்போரைச் சிரிக்க வைக்கின்றது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் சிம்புவும் வி.டி.வி. கணேஷும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் எனலாம். இயக்குநர் வெங்கட் பிரபு, எப்படி அவரது தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டாரோ, அதேபோல் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தில் நடிகர் வி.டி.வி. கணேஷ் இல்லாமல் இருக்க மாட்டார் எனக் கூறும் அளவிற்கு இவர்கள் கூட்டணி அமைந்துள்ளது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், போடா போடி போன்ற படங்கள் ரசிகர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்த காம்போ சிம்புவின் படங்களில் பெரும்பாலும் டீ - ஃபால்ட்டாக அமைந்து விடுகின்றது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள உலக அதிசயமான கொலோசியத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது, அந்த இடத்தைச் சுற்றிப்பார்த்தபோது வீடியோ எடுத்துள்ளனர். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. குறிப்பாக நடிகர் வி.டி.வி. கணேஷ் பேசுபவை காண்போரை சிரிக்க வைக்கின்றது. அதேபோல் அவரது நடவடிக்கைகளும் காண்போரைச் சிரிக்க வைக்கின்றது.

குறிப்பாக கொலோசியத்தில் உள்ள பாறைகளில் படுத்துக் கொண்டு நடிகர் வி.டி.வி கணேஷ் கூறுவது எல்லாம் ஹைலைட். பாறைகளில் படுத்துக் கொண்டு இருக்கும் வி.டி.வி கணேஷ், அங்குள்ள ஜன்னல்களைப் பார்த்து, போருக்குச் சென்ற மன்னன் திரும்பி வந்து ஜன்னல்களைப் பார்ப்பான். அவன் எந்த ஜன்னலில் உள்ள ராணியைத் தேர்வு செய்கின்றானோ, அன்று இரவு ராணி மன்னனுடன் இரவு உணவு சாப்பிட வேண்டும் எனக் கூறினார்.

அதேபோல், அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து சிகரெட் புகைப்பது, சிகரெட் புகைக்க அவர்களிடம் சென்று லைட்டர் கேட்பது என வீடியோ முழுக்க ஒரே ஃபன் தான். இதற்கிடையில் வி.டி.வி. கணேஷை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த சிம்பு தவறுதலாக சுற்றுலா வந்திருந்த பெண் பயணியை வீடியோ எடுத்துவிடுகின்றார். அப்போது சிம்புவே, நான் வேற தெரியாம கேமராவை திருப்பிட்டேன். அவங்க அசிங்க அசிங்கமா திட்டியிருந்தா ஒரே அசிங்கமா போயிருக்கும் என புலம்புகின்றார்.

LATEST News

Trending News