கோட் படத்தில் விஜயகாந்தின் மாஸ் என்ட்ரி.. சோஷியல் மீடியாவில் லீக் செய்த தளபதி ஃபேன்ஸ்!
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே விஜயகாந்தின் சரவெடி என்ட்ரி இருக்கும் என ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் அதிரடி என்ட்ரி மற்றும் கோட் படத்தில் ஏஐ மூலமாக கேப்டனை வெங்கட் பிரபு எப்படி கொண்டு வந்திருக்கிறார் என்கிற காட்சிகளை வீடியோவாகவே எடுத்து கேரளாவில் உள்ள தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போட ஆரம்பித்து விட்டனர்.
தமிழ்நாட்டில் தளபதி விஜய்யின் கோட் படத்தை ரசிகர்கள் பார்ப்பதற்கு முன்னாடியே ஒட்டுமொத்த படமும் ஆன்லைனிலேயே வந்து விடும் என்றும் ஸ்பாய்லர்ஸ் பண்ண வேண்டாம் என்றும் இங்குள்ள விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதெல்லாம் முடியாது, இது நல்லா இருக்கு என பரிதாபங்கள் சுதாகர் மோடுக்கு சென்று கேரள ரசிகர்கள் கோலிவுட் ரசிகர்களை அதிகாலை காட்சியை பார்த்து வெறுப்பேற்றி வருகின்றனர்.
கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் சொன்ன மாதிரியே எந்தவொரு தடையும் இல்லாமல் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. ஆடியோ லாஞ்ச் எல்லாம் வைத்து விஜய் பேசும் பேச்சை யாருக்கு எதிராகவாவது திருப்பி விடுவார்கள் என்பதற்காகவோ, கடந்த முறை அனுமதி கிடைக்காததை போல செய்து விடுவார்கள் என்பதற்காகவோ விஜய் இந்த முறை எந்தவொரு புரமோஷனையும் படத்துக்காக செய்யவில்லை. ஆனாலும், விஜய் படத்தை முதல் நாளே பார்க்க தமிழ்நாட்டில் இருந்தும் ரசிகர்கள் கேரளாவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.
மறைந்த கேப்டன் விஜயகாந்தை மீண்டும் திரையில் ரசிகர்கள் காண்பதற்காக விஜய் நடித்துள்ள கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக அவரை வெங்கட் பிரபு தனது கிரியேட்டிவிட்டி மூலம் கொண்டு வந்திருக்கிறார். அர்ச்சனா கல்பாத்தி அதற்காக பல கோடிகளை செலவு செய்து ஏஐ மூலம் விஜயகாந்தை உருவாக்கியுள்ள நிலையில், முதல் சீனிலேயே விஜயகாந்த் வரும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.
சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் #GOAT இருந்து வரும் நிலையில், முதல் காட்சியிலேயே கேப்டன் விஜயகாந்த் கோட் சூட்டில் வரும் காட்சியை ஆன்லைனில் லீக் செய்து விட்டனர். படத்தின் துவக்கத்திலேயே கேப்டன் விஜயகாந்தின் என்ட்ரி செம ட்விஸ்ட்டான சர்ப்ரைஸ் உடன் வரும் நிலையில், ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்த காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. படம் பார்க்கும் வரை ரசிகர்கள் சோஷியல் மீடியா பக்கம் வராமல் இருப்பதே நல்லது. கோட் திரைப்படம் மிஷன் இம்பாசிபிள் படத்தின் பாணியிலேயே வெங்கட் பிரபு உருவாக்கியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.