இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம்..

இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம்..

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு, 2013-ம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, இவர் தமிழில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து, இந்தியில் அட்லீ ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் நல்ல வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது அடுத்து அட்லீ இரண்டு கதாநாயகர்களை வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது. அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும்.

அந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் 2025 ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் படக்குழுவிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES