அமலா பாலை நைட் டின்னருக்கு ரூமுக்கு அழைத்த நபர்...

அமலா பாலை நைட் டின்னருக்கு ரூமுக்கு அழைத்த நபர்...

சினிமாவில் இருக்கும் பெண் கலைஞர்களுக்கு காலங்காலமாக பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பலர் அதை தைரியமாக எதிர்கொண்டு கடந்து வந்துவிடுகின்றனர். சிலரோ அதை வெளியில் சொல்லவே அச்சப்பட்டு உள்ளுக்குள்ளேயே வைத்து பூட்டிக்கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அமலா பால் பற்றி நடிகர் விஷால் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

அமலா பால் சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் ஒரு சர்ச்சையான கதையம்சத்தை கொண்டிருந்தது. அதனையடுத்து அவர் நடித்த மைனா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அமலா பாலின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து தெய்வ திருமகள், தலைவா, வேட்டை, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். திறமையான நடிகை என்ற பெயரையும் அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார் அமலா. ஆனால் சில வருடங்கள் மட்டுமே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்தது. சில காரணங்களால் முறைப்படி இருவரும் விவாகரத்து பெற்றனர். அவர்களது டைவர்ஸுக்கு யூகங்களாக பல காரணங்கள் இன்றளவும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அமலா பாலை பிரிந்த ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

அமலா பாலும் கடந்த வருடம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மேலும் அவருக்கு குழந்தையும் பிறந்திருக்கிறது. கடைசியாக அமலா பால் நடிப்பில் ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே கேரள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை புதிய புயலை கிளப்பியிருக்கிறது. அநேகமாக பெரிய நடிகர்களின் பெயர்களும் இனி வரும் நாட்களில் அடிபடலாம் என்று கூறுகின்றனர் திரைத்துறையினர்.

இந்நிலையில் நடிகர் விஷால் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு அமலா பால் சென்றிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் அமலா பாலிடம் சென்று நைட் டின்னருக்கு ரூமுக்கு வந்துவிடு என்று மறைமுகமாக படுக்கைக்கு அவரை அழைத்தார். இதைக் கேட்டு கொந்தளித்த அமலா பால் அந்த மேனேஜரை அங்கேயே அடித்து துவைத்து எடுத்துவிட்டார். இதனையடுத்து என்னை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை அமலா விவரித்தார்.

நான் உடனே கார்த்தியை தொடர்புகொண்டு நடந்தவற்றை சொன்னேன். பிறகு அந்த மேனேஜரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்தோம். அப்படியான உடனடியான நடவடிக்கைகள்தான் இங்கு தேவைப்படுகிறது. முதலில் யாராவது உங்களில் அப்படி தவறாக அணுகும்பட்சத்தில் செருப்பை கழற்றி அடிக்க வேண்டும். புதிதாக தற்போது திரைத்துறைக்கு வரும் பெண்களுக்கு நான் ஒன்றே ஒன்றுதான் சொல்கிறேன். உங்களுக்கு என்ன மாதிரியான பாலியல் தொந்தரவு இருந்தாலும் என்னிடம் வந்து முதலில் சொல்லுங்கள்" என்றார்.

LATEST News

Trending News

HOT GALLERIES