கூலி படத்தின் அப்டேட் பின்னுதே.. உபேந்திராவுக்கு என்ன ரோல் தெரியுமா?..

கூலி படத்தின் அப்டேட் பின்னுதே.. உபேந்திராவுக்கு என்ன ரோல் தெரியுமா?..

ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலிலிருந்து படத்திலிருந்து புதுப்புது அப்டேட்டுகள் தினம் வெளியானபடி இருக்கின்ற்ன. அந்தவகையில் இன்றும் ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது.

ஜெயிலர் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இதில் அவருடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. மேலும் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கமல் ஹாசனுக்கு விக்ரம் என்ற படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தது போல் கூலி படத்தையும் லோகேஷ் மெகா ஹிட் படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர். எல்சியூ என்று ஒரு சினிமாட்டிக் யுனிவெர்ஸையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். விக்ரம் படத்துக்கு அது ஒர்க் அவுட் ஆனாலும் கடைசியாக லோகி இயக்கிய லியோ படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. குறிப்பாக அந்தப் படத்தில் வேண்டுமென்றே எல்சியூவை திணித்திருக்கிறார் என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் ஓபனாக வைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

லோகேஷ் இதுவரை இயக்கிய படங்களிலேயே லியோ படம்தான் மோசமான விமர்சனங்களை பெற்றது. அதன் காரணமாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் கூலி படத்தை அவர் முக்கியமான படமாகவே பார்க்கிறார். இந்தப் படத்தை வைத்து லியோவில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தரமான பதில் சொல்லும் முனைப்பில் உழைத்துவருகிறார். படத்தின் டைட்டில் டீசரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. இப்போது படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் மும்முரமாக நடந்துவருகிறது.

இந்நிலையில் படத்தில் யார் யாருக்கு என்னென்ன கேரக்டர் என்ற அப்டேட்டுகள் தினம் வெளியிடப்படுகின்றன. இதுவரையில் சௌபின், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அந்தவகையில் இன்றும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி உபேந்திரா இந்தப் படத்தில் கலீஷா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் போஸ்டரும் சமுக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

LATEST News

Trending News