ஹேமா கமிட்டி குறித்து கேள்வி.. அறிவு இருக்கா என கோபத்தில் சீறும் ஜீவா? தொடர்ந்து நழுவும் கோலிவுட்

ஹேமா கமிட்டி குறித்து கேள்வி.. அறிவு இருக்கா என கோபத்தில் சீறும் ஜீவா? தொடர்ந்து நழுவும் கோலிவுட்

தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தான் ஏதற்காக மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன் என மோகன்லாலே விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் மோகன்லால் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பலரும் கூறி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக, நடிகை பார்வதி, காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக மோகன் லால் ஒரு கோழை, மோகன் லால் மட்டும் இல்லாமல் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகளே கோழை என குறிப்பிட்டிருந்தார்.

ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கை தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடமும், கோலிவுட் கதாநாயகர்களிடமும் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த கேள்விக்கு ஒரு நடிகர் கூட இதுவரை நேரடியான பதிலைக் கூறவில்லை. கேள்வியை எதிர்கொண்ட நடிகர்கள் மலுப்பலாகவே பதில் அளித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள விஷால், கார்த்தி, கருணாஸ் என அனைவரும் மலுப்பலான பதிலையே கூறி வருகின்றனர்.

குறிப்பாக இது தொடர்பான கேள்விக்கு, விஷால், யாராவது உங்களிடம் நடிக்க வாய்ப்புத் தருகின்றேன் எனக் கூறி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தால் அவர்களை செருப்பைக் கழட்டி அடியுங்கள் எனவும், நடிகர் சங்கத்திலேயே 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என பதில் அளித்துள்ளார். அதேபோல் நடிகர் கருணாஸ் பதில் அளிக்கையில், அது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறுகின்றார்.

அதேபோல் நடிகர் கார்த்தியிடம் கேட்கப்பட்டபோது, இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் சந்திப்பு என்பது மெய்யழகன் படத்துக்கானது. இது குறித்து மற்றும் ஒரு தருணத்தில் பேசுகின்றேன் என பதில் அளிக்கின்றார். அதேபோல் நடிகர் ஜீவா தேனியில் துணி கடை ஒன்றைத் திறந்து வைக்க வந்தபோது, அவரிடம் இது தொடர்பான கேள்வி பத்திரிகையாளர் தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜீவா, “ இப்போது நான் இந்த துணிக்கடையை திறந்து வைக்க வந்துள்ளேன். அனைவரது முகத்திலும் சிரிப்பு உள்ளது. நான் இந்த சூழலை இப்படியே தொடரவேண்டும் என நினைக்கின்றேன் பதில் கூறிவிட்டு, நல்ல விஷயம் பண்ண வந்த இடத்தில் அபசகுணமாக கேள்வி கேட்கின்றீர்கள். அறிவு இருக்கா எனக் கூறினார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் நடிகர் ஜீவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக தமிழ் சினிமா நடிகைகள் ( நடிகைகள் அபிராமியைத் தவிர) தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா நடிகர்கள் தொடர்ந்து நழுவிக்கொண்டே உள்ளனர். யாருமே நேரடியான பதில் அளிக்காதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES